Friday, October 14, 2022

Love Two Tamil Poems

These are the two ancient Tamil poems of Awaiyar (ஔவையார்) that captured my attention


The first one talks about the silence of a person. 

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்

ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்

வாடி யிருக்குமாங் கொக்கு -  ஔவையார் (மூதுரை, 16)

 A person decides to be silent in adverse situation does not mean the person is stupid; the person is waiting for the right opportunity to strike or waiting for the right moment for action. The correct example given by poet Awai is the crane.  While standing in the waterbody, it let goes the smaller fish in order to strike a bigger one.

கொக்கு மௌனமாக ஒற்றைக்காலிலே நிற்கிறதே என்பதற்காகக் கொக்கை ஏமாளி என்று எண்ணவேண்டாம். நேரகாலம் வரும்போதுதான் கொக்கு யாரென்று தெரியவரும்.


 
The second song is about unlearned person's pretensions.  An unlearned person pretends to be a learned person is like a turkey fowl thinking that it is a peacock and dances with its ugly wings.

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித்  தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி - ஔவையார் (மூதுரை, 14)

 முறையாக கற்காதவன், கற்றறிந்தோர் சபையில் கவி பாடுவது, கான மயில் தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, தன்னையும்  மயிலாக பாவித்து தன் அழகில்லாத சிறகுகளை விரித்தாடியது போலாகும்.

Beautiful poems and comparisons. 

No comments:

Post a Comment